வணக்கம் மக்கள்ஸ்,
கடந்த மூன்று வாரமாக உங்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக நடைபெற்ற திரையுலகுக்கு பதிவுலகம் வழங்கும் விருதுகள் 2010 இன் விருது வழங்கும் பதிவில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. ஏற்க்கனவே குறிப்பிட்டது போல இரண்டாவது முறையாக இடம்பெறும் இந்த வாக்கேட்டுப்பில் பலர் ஆர்வமாக வாக்களித்து இந்த செயலை வெற்றி பெற வைத்துள்ளனர். ஏற்ப்பாட்டுக்குழுவினர் என்னும் ரீதியில் சந்தோசமடைவதுடன் உங்க எல்லோருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எங்கள் ஆரம்ப பதிவில் குறிப்பிட்டது போல ஒருவர் இருவராகி பின்னர் ஒரு சிறு குழுவாக வாக்கெடுப்பை ஆரம்பித்து அதன் பின் ஒவ்வொரு பதிவராக எங்களோடு கைகோர்க்க இன்று அதிகமான பதிவர்களின் ஆதரவுடன் வெற்றிக்கொடி நாட்டியுள்ளோம். வாக்கேடுப்புக்கென தனி வலைப்பூவை ஆரம்பித்தது மட்டுமன்றி வாக்கெடுப்பையும் கூடியளவு பாதுகாப்புடன் நேர்மையாக நடத்தி முடித்ததில் உங்களுக்கும் எங்களுக்கும் பெருமை தான்.
திரை உலகில் ஒவ்வொரு பிரிவுகளையும் வகையாக்கி கடந்த ஜூன் மாதம் முதல் இவ்வருட மே மாதம் வரையான காலத்தில் கலக்கிய பிரபலங்கள் படங்களை இங்கே போட்டிக்காக தந்திருந்தோம். சில வாக்காளர்கள் இதை கவனிக்காது எங்கள் மீது கேள்விக்கணை தொடுத்திருந்தனர். அவர்களுக்கு ஏற்க்கனவே தகுந்த ஆதாரங்களை காட்டி இருப்பினும் இப்போது மீண்டும் ஒரு முறை அதை நினைவூட்டுகின்றோம். தெரிவுகளை பொறுத்தவரை நாங்கள் போட்டிக்காக சேர்த்தான் யாரும் இங்கே போட்டியிட தகுதியற்றவர்கள் என சொல்ல முடியாதளவிற்கு தெரிவுகள் இருந்தாலும் ஒரு சில நட்சத்திரங்களை நாங்கள் தவற விட்டமைக்கு மன்னிப்பு கோருகின்றோம். தொடர்ந்து வரும் வருடங்களில் இது நடக்காது என்பதையும் தெரிவித்துகொள்கின்றோம்.
தங்கள் கருத்துக்களை பின்னூட்டம் வாயிலாக ஏராளமானோர் பகிர்ந்திருந்தாலும் சில தனி நபர தாக்குதலை அமைந்த பின்னூட்டங்களை நாங்கள் வெளியிடவில்லை. காரணம் வாக்களிப்பில் அவை தேவையற்ற உரையாடல்களுக்கே வழி வகுக்கும் என்பதால். எனவே வெளியிட முடியாத பின்னூட்டங்கள் இட்ட நண்பர்களிடம் மன்னிப்பு கேட்கும் அதே நேரம் உங்களுக்கும் எங்கள் நன்றிகள். மிக ஆர்வமுடன் வாக்களித்த வாக்காளர்களுக்கும், எங்கள் லிங்க் லோகோவை தங்கள் வலைப்பூக்களில் இட்டு ஆதரவளித்த நண்பர்களுக்கும் இதற்கான விளம்பரமாக எங்கள் லோகோவை திரட்டிகளில் இணைத்து அமோக ஆதரவளித்த தமிழிஷ்,யாழ்தேவி, தலைவன் போன்ற திரட்டிகளுக்கும் எங்கள் நன்றிகள்.
இங்கே தனிப்பட்டு யார் பெயரையும் நாங்கள் குறிப்பிட்டு நன்றி சொல்லாமல் விட காரணம் யாரையும் தவற விடக்கூடாது என்பது மட்டுமன்றி பலர் எமக்கு தங்கள் ஆலோசனையையும் ஆதரவையும் வழங்கி இருந்தனர் என்பதே. நீங்கள் எல்லோரும் எங்கள் நன்றிக்குரியவர்களே.
வாக்களிப்பு நடைபெறும் காலத்தில் வாக்காளர்கள் எந்தளவிற்கு இதில் உடன்பாட்டுடன் ஈடுபட்டனர் என்பது Facebook போன்ற சமூக தளங்களில் இதற்கான பிரசாரமும் மின் அஞ்சல மூலமான பிரசாரமும் நல்லா உதாரணம். சில வகையில் அதிக வாக்குகள் கிடைக்க முக்கிய காரணமாக இதை சொல்லலாம். குறிப்பிட்ட ஒருவருக்கு வாக்களிக்கும் படி வாக்களிப்பு நடைபெற்ற வலைப்பூவை சுட்டி எங்களுக்கே மின் அஞ்சல வந்தது என்றால் பாருங்களேன்.
வாக்களிப்பு முடிந்தாயிற்று இதோ நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த முடிவுகள் இப்போது.
சிறந்த பாடலாசிரியர்.
இந்த வகையை பொறுத்த மட்டில் ஆரம்பம் முதலே நா.முத்துக்குமாருக்கும் தாமரைக்கும் இடையில் பலத்த போட்டி இடம்பெற்றது. மற்ற பாடலாசிரியர்கள் பெரிதாக போட்டியை வழங்காதது கவலையே. ஆனால் 96 வாக்குகள் அதிகம் பெற்று சிறந்த பாடலாசிரியராக பாடல்களால் கதை பேசும் நா.முத்துக்குமார் தெரிவாகி உள்ளார்.
அளிக்கப்பட்ட வாக்குகள் தொடர்பான விபரம் பெற இங்கேசொடுக்குங்கள்.
சிறந்த பாடகி.
இந்த வகையில் முதலாமிடத்துக்கான போட்டி அதிகம் இருக்கவில்லை. ஆரம்பம் முதலே ஒருவர் முன்னிலையில் இருக்க. அடுத்த இடத்துக்கான போட்டி மிக சுவாரஸ்யமாக இருந்தது. ஆரம்பம் முதலே வாக்குகளை அள்ளிய கொஞ்சும் குரலுக்கு சொந்தக்காரியான ஸ்ரேயா கோஷல் 466 வாக்குகள் வித்தியாசத்தில் சிறந்த பாடகியாக தெரிவாகி உள்ளார்.
சிறந்த பாடகர்.
சிறந்த பாடகிகளுக்கு கிடைத்த மொத்த வாக்குகளை விட இந்த வகைக்கு கிடைத்த வாக்குகள் குறைவே. ஆயிரம் வாக்குகளுக்கு குறைவாக கிடைத்த ஒரு வகையும் இது மட்டுமே. இங்கேயும் பெரிய போட்டி என சொல்ல முடியாதளவிற்கு கார்த்திக்கின் ஆதிக்கம் ஆரம்பம் முதல் தொடர்ந்தது. முன்னவர் முன்னிலை வகிக்க மற்றையோர் தமக்குள்ள முட்டி மோதினர். கார்த்திக்குக்கு ரஞ்சித் ஓரளவு சவால் விட எண்ணினாலும் 197 வாக்குகள் வித்தியாசத்தில் உசிரை கொள்ளும் பாடல்களை தரும் கச்சிதக்குரலோன் கார்த்திக் சிறந்த பாடகராக தெரிவானார்.
சிறந்த இசையமைப்பாளர்.
கடந்த வருடம் போல இம்முறையும் ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் எந்த சவாலும் இன்றி முன்னணியில் திகழ்ந்தாலும். மற்ற இசை அமைப்பாளர்களுக்கு கிடைத்த வாக்கு எண்ணிக்கை அதிர்ச்சியடைய வைத்தது. கடந்த வருடம் கலக்கிய ஒருவரான தேவி ஸ்ரீ பிரசாத்க்கு கிடைத்த வாக்குகள் 8 மட்டுமே, இம்முறை குறைவான வாக்குகளை பெற்றவர் அவரே. இம்முறை சிறந்த இசையமைப்பாளராக 555 வாக்குகள் வித்தியாசத்தில் உங்களால் தெரிவானவர் சந்தேகமே இன்றி விண்ணை தாண்டிய நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்.
சிறந்த நகைச்சுவை நடிகர்.
இந்த வகையில் ஆரம்பம் ஒன்று முடிவு இன்னொன்றாக அமைந்தது எங்களுக்கும் சிறிது ஆச்சரியமே. ஆரம்பத்தில் யாருமே அசைக்க முடியாது போன்ற ஒரு வேகத்தில் வடிவேலுக்கு அதிக வாக்குகள் கிடைத்தாலும் நாள் செல்ல செல்ல அவரை மெதுவாக முந்த தொடங்கிய சந்தானம் வெற்றிக்கோட்டை தொட்டிருக்கின்றார். 120 வாக்குகள் வித்தியாசத்தில் நகைச்சுவை சந்தணம் சந்தானம் இம்முறை விருதினை பெறுகின்றார்.
சிறந்த வில்லன்.
இந்த வகையில் முதலிடத்துக்கு இருவர் முட்டி மோதினாலும் பின்னர் ஒருவர் முந்தியது நடந்துள்ளது. ஆரம்பத்தில் வேட்டைக்காரன் திரைப்படத்தில் நடித்த சலீம் கௌஸ் வாக்குகளை குவித்தாலும் அதன் பின்னர் செல்லம் பிரகாஷ்ராஜ் தன் வில்லத்தனத்துக்கு கிடைத்த 165 அதிக வாக்குகள் என்னும் சொத்தினால் வெற்றி பெற்றுள்ளார்.
சிறந்த இயக்குனர்.
இம்முறை மிக பரபரப்பை ஏற்படுத்திய ஒரு வகை இது. கடைசிவரை கடுமையான போட்டியை கொடுத்த ஒரு வகையும் இது. பரவலாக வாக்குகள் பதியப்பட்ட ஒரு வகையான இந்த வகையில் இந்த வருடம் வந்த இரண்டு யதார்த்தமான படங்களை இயக்கிய இயக்குனர்கள் தமக்குள் கடுமையான போட்டியை கொடுத்தனர். 26 வாக்குகள் வித்தியாசத்தில் கெளதம் மேனனை வென்று தொடர்ந்து அருமையான படங்களை வழங்கி வரும் அங்காடி தெரு இயக்குனர் வசந்தபாலன் தெரிவாகி உள்ளார்.
சிறந்த படம்.
இயக்குனரில் யார் சிறந்தவர் என்ற போட்டி நடந்ததோ அதே போல இங்கும் கடுமையான போட்டி நடந்தது. ஆரம்பத்தில் விண்ணை தாண்டி வருவாயா படம் வாக்குகளை அள்ள தடுமாறிய அங்காடி தெரு அதன் பின் கம்பீரமாய் வாக்குகளை பெற்று 147 வாக்குகள் வித்தியாசத்தில் சிறந்த படமாக தெரிவாகி உள்ளது.
ஆதிக்கம் செலுத்தும் நாயகர்கள்.
இந்த வகையை பெரும்பாலானா வாக்காளர்கள் விளங்கிக்கொள்ளவில்லை இப்போதும் தெளிவற்று இருப்பாவர்கள் இந்த வகை பற்றி நாம் இட்ட கடந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள். தனி மனித தாக்குதல்கள் இடம்பெற்ற வகையும் இதுதான். அதே போல பாரிய விளம்பரம் மின்னஞ்சல்கள் குழுக்கள் என பிரசாரம் செய்யப்பட்ட வகையும் இதுதான். அப்படி இருக்கையில் வாக்குகள் குவிந்தது ஆச்சரியமில்லை. ஆரம்பத்தில் சூர்யா வாக்கு வேட்டையை ஆரம்பிக்க அவரை முந்திக்கொண்டு முதல் தடவையாக இம்முறை போட்டியாள்ளர்களில் 100 வாக்குகளை விஜய் கடந்தார். ஆரம்பத்தில் விஜய் சூர்யா போட்டியாக இருந்த இந்த வகை அஜித்துக்கு வாக்கு விழ ஆரம்பித்ததும் விஜய் அஜித் இருமுனை போட்டியாக மாறியது. இதில் விக்ரம் பாரிய வீழ்ச்சி காண சூர்யாவும் தாக்கு பிடிக்க முடியாமல் போக விஜய் அஜித் மாறி மாறி முன்னிலை வகித்தனர். அதன் பின் எந்த தங்கு தடையும் இன்றி தல அஜித் அமோக வெற்றி பெற்றுள்ளார். அதிக வாக்குகள் பெறப்பட்ட வகை, தனி நபர ஒருவருக்கு அதிக வாக்குகள் கிடைத்த வகை, முதலாமவருக்கும் இரண்டாமவருக்கும் இடையில் அதிக வாக்குகள் உள்ள வகை என்ற பல சிறப்புகள் கொண்ட வகை இது. இறுதியில் 1148 வாக்குகள் வித்தியாசத்தில் தல அஜித் ஆதிக்கம் செலுத்தும் நாயகனாக தெரிவாகி உள்ளார்.
சிறந்த நடிகை.
இங்கே நடந்ததோ இன்னொரு சுவாரஸ்யம். ஆரம்பத்தில் த்ரிஷா கொஞ்சம் போட்டி போட்டாலும் அதன் பின் அங்காடித்தெருவில் வாழ்ந்து காட்டிய அஞ்சலி 394 வாக்குகள் வித்தியாசத்தில் முதலிடத்தை பெற்றது. நட்சத்திரம் என்பதையும் மீறி நடிக்கும் நடிகளிகளை ரசிகர்கள் எப்போதும் வரவேற்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது. ஏனைய நடிகைகளுக்கு சவாலாகவும் ஒரு முன் உதாரணமாகவும் இது அமைந்துள்ளது குறிப்பிட தக்கது.
சிறந்த நடிகர்.
இம்முறை சிறந்த நடிகரான அனைவரின் ஏகோபித்த ஆதரவில் ஒரு நடிகர் தெரிவாகி இருந்தாலும். இது சிலருக்கு ஆச்சரியத்தை கொடுத்தது மட்டுமன்றி பல முன்னை நடிகர்களுக்கு ஒரு நல்ல பாடமாகவும் அமைந்துள்ளது. அநேகமாக எல்லோருக்கும் வாக்குகள் விழுந்தாலும் முதல் மூன்று இடங்களை பெற்றவர்கள் மற்ற நடிகர்களை விட நட்சத்திர அந்தஸ்து பெற்றவர்கள் என்பது உண்மை. நடிப்புலக மேதை கமலை விட 65 வாக்குகள் மட்டுமே பேராண்மை படைத்த இளம்புயல் ஜெயம் ரவி பெற்றமை அவருக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசாகும். ஆனால் கமலையும் விஞ்சி வென்றிருப்பவரின் வெற்றி உண்மையில் ஆச்சரியமானது. காரணம் திறமை இருந்தும் அதை வெளியே கொண்டு வர வாய்ப்பில்லாது மாஸ் ஹீரோ வட்டத்தில் சிக்கி திணறிக்கொண்டிருந்த லிட்டில் சூப்பர் ஸ்டாராக இருந்து இப்போது யங் சூப்பர் ஸ்டாராக மாறி இருக்கும் சிலம்பரசன் தன் வழக்கமான பன்ச் டயலாக் விரல் வித்தைகளை விட்டு அமைதியாக இயல்பாக நடித்ததுக்கு அவருக்கு கிடைத்த பரிசு தான் இந்த வெற்றி. இந்த தோல்வியில் ஒரு ஆசானாக கமல் சந்தோசமடைவார் என்றே நம்புவோம். இந்த வெற்றியானது நிச்சயம் மற்ற நடிகர்களை கொஞ்சம் சிந்திக்க வைக்கும் நல்ல படங்களை தர வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
விருதுகளை வேன்றவர்களை பார்த்தாயிற்று இனி என்ன எல்லோர் சார்பாகவும் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இங்கே தோற்றவர்கள் திறமை சாலிகள் இல்லை என்றில்லை. விருதுக்கான காலப்பகுதியில் அவர்களை விட வென்றவர்கள் கலக்கி இருக்கின்றார்கள் அது உங்களுக்கு பிடித்திருக்கின்றது என்பதுதான் உண்மை. அடுத்து என்ன இந்த தேரை வடம் பிடித்து இழுத்து வந்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள். மீண்டும் அடுத்த வருடம் சந்திப்போம்......
இந்த விருது வழங்கும் வைபவம் சம்பந்தமான சில பொழுது போக்கு பதிவுகளை வரும் நாட்களில் எதிர்பாருங்கள். ஏற்பாட்டுக்குழுவில் தெரிவுகளின் போது நடந்த சண்டைகள் சச்சரவுகள் சுவாரஸ்யங்கள் கலந்து எல்லாம் தர உள்ளோம்.
மீண்டும் நன்றி மீண்டும் சந்திப்போம்.
திரையுலக்குக்கும் பதிவுலக்கும் பாலம் அமைப்போம்.
இங்ஙனம்,
ஏற்பாட்டுக்குழுவினர்.
69 comments:
எனது கடமையை செய்தாச்சு...:) :)
@ Jhona
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
அந்தத் தெரிவு சரியானதா, இல்லையா என்று வாக்காளர்களின் கருத்தைப் பார்ப்போம்.
மற்றும்படி அந்தத் தெரிவு பிழையற்றது என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கையுண்டு.
உங்கள் கருத்துக்களைத் தொடர்ந்தும் தெரிவியுங்கள்.
நன்றி.
@ வதீஸ்
நன்றிகள்...
உங்கள் தெரிவு வெற்றிபெற எங்கள் வாழ்த்துக்கள்.
ஆதிக்கம் செலுத்தும் நாயகர்கள்
ado wheres SIMBU
upcoming superstar
???????????
soo bad
we trust only telent
@ Anonymous
He's in the best Actor's list and so far leading...
In this group, we've included four senior guys who failed a bit recently, but still a force...
Best actor award is better and bigger than this 'Entertainers'.
Hope you understand the difference and feel the honor Simbhu's gonna get...
Thanks for the visit and comment....
ஆதிக்கம் செலுத்தும் நாயகர்கள் என்றால் என்ன அர்த்தம் ... தோல்விகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துபவரா , அப்படி என்றால் தல , சூர்யா , விக்ரம் பெயர்கள் அதில் ஏன் வந்தது ...
இல்லை வ்ற்றியில் ஆதிக்கம் செலுத்தும் ஹீரோக்களா , அப்படி என்றால் விஜய் பெயர் ஏன் வந்தது...
எது எப்படியோ உங்கள் தயவில் விஜய் முன்னணியில் வந்து விடுவார்
@ ராஜா
ஆதிக்கம் செலுத்தும் என்பது 'மாஸ் ஹீரோக்கள்' என்று சாதாரணமாக அழைக்கப்படுகின்ற ஆனால் குறிப்பிட்ட காலப்பகுதியில்(200 ஜுன் முதல் 2010 மே வரை வெளிவந்த, சிங்கம் திரைப்படம் தவிர ) பெரியளவில் வெற்றியைத் தராத அல்லது சிறந்த நடிகர் என்று அழைக்கப்படுமளவிற்கு திரைப்படத்தைத் தராத நாயகர்களைக் குறிப்பிட்டிருக்கிறோம்.
மற்றையது எங்களுக்கும் வெற்றி பெறுவதற்கும் இடையில் எந்தச் சம்பந்தமும் இல்லை.வாக்காளர்கள் வாக்களிப்பின் வெற்றி பெறலாம், அது வாக்காளர்களின் கைகளில் மட்டுமே உள்ளது.
தவறான புரிதல் என்று நம்புகிறேன்.
கருத்துக்கு நன்றிகள்.
Pls change the font colour cant read some text
என் கடமையை முடிச்சுட்டேன்...!!!
நாங்களும் வாக்குப் போட்டிட்டமெல்லே?
Done
ஆதிக்கம் செலுத்தும் நடிகர் பகுதியில் 255 வாக்குகள்...... அதிலும் விஜய் முன்னிலையில்...... சிறந்த நடிகர் பகுதியில் 180 வாக்குகள் மட்டும்......
( எங்கேயோ இடிக்குதே...... )... என்ன கொடுமை சார் இது ??????
@shan shafrin
அது வாக்காளர்களைக் கேட்க வேண்டியது.
எனினும் நாங்கள் அறிந்த வகையில், பேஸ்புக் குழுமங்கள், யாகூ குழுமங்களூடாக பிரசாரம் நடப்பதாக அறிந்தோம்.
ஆகவே அப்படியானவர்கள் வந்து தங்கள் விருப்பத்துக்குரிய மாஸ் கதாநாயகனுக்கு மாத்திரமே வாக்களித்துவிட்டுச் சென்றிருக்கலாம்.
கள்ள வாக்குகளைத் தடுப்பதற்கான எங்களாலான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம், இதுவரை அப்படி நடந்ததாகவும் நாம் சந்தேகப்படவில்லை.
தொடர்ந்தும் இணைந்திருங்கள்.
@ Anonymous
We'll be grateful if you specify the text...
@ செந்தழல் ரவி
@ கமல்
@ உலவு
மூவருக்கும் நன்றிகள்...
உங்கள் தெரிவு வெற்றிபெற வாழ்த்துக்கள்...
நிச்சயமாக...... :)..... ( இறுதி வரை பொறுத்திருந்து பார்ப்போம்..... )
@shan shafrin
நன்றி...
i want to know first, is this award go to 2009 or 2010? and in the category "AAthikam seluthum Nadikargal" you missed Dhanush. if u asked me i help you for the selections?
I.m not satisfy;
BEST ACTRESS-tamanna
BEST Villan-VEttakaran
Best director-Jananathan
YOu missed lot of "sinmayi" best songs there in the past annual?
சிறந்த வில்லன் நடிகர் தேர்விற்கு ஏன் 'சலீம் கொளஸை தெரிவு செய்தீர்கள்!!!!இத் தெரிவில் நீங்கள் பொருந்துகிறீர்களா??
சிறந்த நகைச்சுவை நடிகர் தேர்விற்கு ஏன் பிரேம்ஜி யை தெரிவு செய்தீகள்..அவர் அரு சிறந்த நகைச்சுவை குண்சித்திர நடிகர்.
ஒரு படத்திற்கு மட்டுமே இசையமைத்த ஸ்ருதி ஹாசன் ஏன்?????அதை விட ஜேம்ஸ் வஸந்த் ஐ தெரிவு செய்திருக்கலாமே!!!
ஆதிக்கம் செலுத்தும் நடிகர் தேர்வில் அஜித்,விஜயை விட யோகி படத்துக்காக இயக்குனர் அமீரை தெரிவு செய்திருக்கலாமே!!!
சிறந்த இயக்குனர் தேர்விற்கு அமீர்,தன்கர் பச்சான்,மணிரத்தினம் போன்றோர்களுன் உள்ளனரே!!!!!!
சிறந்த பாடகர் தெரிவில் ஏன் பென்னி டயாலை விட்டீர்கள்????
@ ketheeswaran
Films and artists selected between June 2009 and May 2010.
We felt that if we include Dhanush there, then how about Simbhu?
So we selected the top 4 there.
And regarding your next para,
// I.m not satisfy;
BEST ACTRESS-tamanna
BEST Villan-VEttakaran
Best director-Jananathan ///
What does this mean?
You aren't satisfies with these selections?
But you got to admit that thy got some votes there, so voters feel that they are good enough to be here.
And regarding Chinmayi,
can you please specify some songs?
And,
Thanks for the feedback...
@ thouseef
வேட்டைக்காரனில் அவரது வில்லன் கதாபாத்திரம் பாராட்டப்பட்டதென்ற நம்புகிறோம்.
பிரேம்ஜி தொடர்பாக,
அதை நகைச்சுவை என்று கருதலாம் என்று நம்புகிறோம்.
அவர் நகைச்சுவைக்காகவே தனது பாணியைக் கையாளுகிறார் என்று நம்புகிறோம்.
ஸ்ருதி ஹாசன் தொடர்பாக,
எத்தனை படங்கள் என்பது முக்கியமானதல்ல.
குறித்த காலப்பகுதியில் அவரது இசை எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது தான் காரணியாக இருத்தல் வேண்டும்.
உன்னைப் போல் ஒருவன் இசை பெரிதும் பாராட்டப்பட்ட ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதிக்கம் செலுத்தும் நடிகர்கள் என்பதால் மாஸ் கதாநாயகர்கள் என்று கருதப்படும் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களையே தெரிவுசெய்தோம், ஏனென்றால் அவர்களுக்கு பாரிய இரசிகர் பட்டாளம் உண்டு ஆகவே அவர்களது விருப்ப நடிகர்களை தெரிவுசெய்ய அவர்களுக்கும் இடம்வழங்க வேண்டும் என்று.
ஒரு நடிகராக அமீர் தமிழ் சினிமாச் சூழலில் இன்னும் தனது பாதத்தை முழுமையாக பதித்து தாக்கத்தைச் செலுத்தவில்லை என்று நம்புகிறோம்.
சிறந்த இயக்குனர்,
குறிப்பிட்ட காலப்பகுதியில் மேற்குறிப்பிட்டோர் இயக்கிய திரைப்படங்கள் வெளிவந்தனவா?
பென்னி தயால்,
எஸ்.பி.பி கூட விடுபட்டிருக்கிறார்...
கவனித்துப் பாருங்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.
எனினும் கருத்துக்களை அளிக்க முன்னர் முழுமையான நிலைவரத்தை அறிவது சிறப்பானது.
கருத்திற்கு நன்றிகள்.
கடமை முடிச்சுட்டேன்
எனது ஓட்டு போடப்பட்டது ... சிறந்த நகைச்சுவை நடிகரில் விவேக்-ஐயும் இணைத்திருக்கலாம்.
@ இசக்கி ராஜா, மும்பை.
குறித்த 2009 ஜுன் முதலான காலப்பகுதியில் விவேக் பெரிதளவில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தவில்லை என்று அனைவரும் பொதுவாக கருத்துத் தெரிவித்தனர்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@ ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
நன்றிகள்...
உங்கள் இருவரின் தெரிவுகளும் வெற்றி பெற வாழ்த்துக்கள்....
Very happy to see that our Tamil People's Cinema taste is becoming good. Best example, votes given for Angadi Theru Film and related personalities (Anjali, Vasantha Balan & Na.Muthukumar). This will lead to some best films in Tamil Cinema.
Thanks Satheesh & the Team
@ Anonymous
Yeah Thanks...
வாக்களித்து விட்டேன், ஆனால் எனக்கும் சில சந்தேகங்கள் ஆதிக்கம் செலுத்தும் நடிகர் என்பது தேவையற்ற ஒன்று என்பது எனது கருத்து, ஏனென்றால் சிறந்த நடிகரே ஆதிக்கம் செலுத்தவும் வேண்டும்.. அதை நோக்கி நாம் முன்னேற வேண்டும்.
அடுத்தது பாடகிகள் தேர்வில் சின்மயியை தேர்வு செய்து இருக்க வேண்டும் என்ற கேதீஸ்வரனின் கருத்தினை அமோதிக்கிறேன்.. அவர பாடிய பாடல்கள் சில
பொக்கிஷம் - நிலா நீ வானம் காற்று
ஆதவன் - வாராயோ வாராயோ
விண்ணைத் தாண்டி வருவாயா - அன்பிலவன்
@ மதுரகன் :
ஆதிக்க நாயகர்கள் என்பதை நாங்கள் ஆதரிக்கவோ எதிர்க்கவோ இல்லை.
அத்தோடு சிறந்த நடிகர்கள் தான் ஆளவும் வேண்டும்.
ஆனால் வாக்களிப்பைப் பார்த்தீர்கள் தானே?
அந்தப் பிரிவில் மற்றையவற்றை விட அதிகமாக வாக்களிக்கிறார்கள்...
மற்றையது சின்மயி தொடர்பாக,
சின்மயி அங்கே இருக்கிறார்...
இல்லையா?
தெரிவுசெய்திருக்கிறோம்.
அநேக இடங்களில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை மையமாகக் கொண்டே வாக்களிப்பு இடம் பெறுகின்றது. பாவம் இதனால் கமல்ஹாசன் தொடக்கம் அங்காடித்தெரு வரை அடிபட்டுப் போகிறது.
ஆதிக்கம் செலுத்தும் நாயகர்கள் விருதை தவிர்த்திருக்கலாம். கதையையும், திரைக்கதையையும் தவிர எதுவுமே திரைவுலகில் ஆதிக்கம் செலுத்துவதாக எனக்குத் தெரியவில்லை. அனைவரது பின்னூட்டங்களுக்கும் பதில் தந்திருப்பதற்கு வாழ்த்துக்கள்.. விரைவில் முடிவுகளை நோக்கி...
@ ஹரூன்
அண்மையில் வெளிவந்த திரைப்படம் என்பதால் இருக்கலாம், ஆனால் அந்தத் திரைப்படம் சிறப்பானதிரைப்படமே என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என்று நம்புகிறோம்.
வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றிகள்.
உங்கள் தெரிவு வெற்றிபெற வாழ்த்துக்கள்.
@ விக்னேஷ் காந்த்
நீங்கள் சொல்வது ஒருவகையில் உண்மை, ஆனாலும் யதார்த்தங்களை, தற்போதைய சூழ்நிலைகளை, தற்போது உண்மையில் என்ன நடக்கின்றன என்பதையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
இனிவரும் காலகட்டங்களில் ஏதும் மாற்றங்கள் ஏற்படுகின்றனவா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.
// அனைவரது பின்னூட்டங்களுக்கும் பதில் தந்திருப்பதற்கு வாழ்த்துக்கள்.. //
கருத்துக்களை உங்கள் நேரங்களை செலவழித்து எங்களிற்குச் சொல்கையில் அதற்கு பதிலளிப்பது எங்கள் கடமை என்று நம்புகிறோம்.
உங்கள் தெரிவுகள் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
karthik, karthikl, thepraveen_2007. selva ஆகியோருக்கு...
ஒரு குறிப்பிட்ட நடிகரை நோக்கிய தனிப்பட்ட தாக்குதல்களை எங்களால் பிரசுரிக்க முடியாது.
தயவுசெய்து மற்றவர்களின் இரசனைகளையும் புரிந்துகொள்ளுங்கள் என்று தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறோம்.
தோழமையுடன்,
உங்கள் நண்பர்கள்.
என் கடமையை முடிச்சுட்டேன்...!!!
சிறந்த ACTOR & ACTRESS வெற்றிபெற வாழ்த்துக்கள்.
சிறந்த திரைப்படம்
இந்தவருடத்தில் விண்ணை தாண்டி வருவாயா திரைபடத்திற்கு பின் அதிக வசூல் செய்த திரைப்படம் பையா தன் அந்த திரைபடத்தை காணவில்லை அது மட்டும் குறையாக தெரிந்தது சொன்னேன் மற்றபடி எல்லாம் சூப்பர் அப்படியும் சொல்ல முடியாது அதில் எண்ணக்க ஜெயமாறன் பெயர காணவில்லை
@ muscatsuresh
உங்கள் தெரிவு வெற்றிபெற வாழ்த்துக்கள்....
@ Jeyamaran
வசூலை மட்டும் கருத்திற்கொண்டு சிறந்த திரைப்படமாகக் கருதமுடியுமா?
அது ஒரு மகிழ்விக்கும் (Entertaining) திரைப்படம் என்ற வகையில் வருமென்று நம்புகிறோம்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்.
உங்கள் தெரிவுகள் வெற்றிபெற வாழ்த்துக்கள்....
ஆதிக்க நாயகர் பகுதி விஜய் , அஜித் போட்டியாக மாறிவிட்டதாக நான் உணர்கிறேன்....... ( கருத்து தவறாய் இருப்பின் மன்னிக்கவும்...... )
@ shan shafrin
முன்பு விஜய் முந்துவதை இடிக்கிறது என்றீர்கள், இப்போதாவது அது தன்பாட்டில் நடப்பதை ஒத்துக் கொள்கிறீர்களா?
இப்போது அஜித் முந்துகிறார்...
அஜித் விஜய் மோதல் நடக்கிறது.
கவலை தான் என்றாலும், தனிப்பட்டவர்களின் விருப்பங்களில் தலையிடுவதில்லை என்பதால் நாங்கள் அதுபற்றிக் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை.
மற்றும்படி தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்கள் கருத்துகக்களைத் தொடர்ந்து தெரிவியுங்கள்....
கருத்துக்களுக்கு நன்றிகள்.
அந்த போட்டி , இந்த பகுதிக்கு ஆரோக்கியமானதில்லை..... என்பது என் கருத்து.....ஏனெனில்... ஓரிரு மணித்தியாலங்களில் ஒருவருக்கு 120 க்கு மேற்பட்ட வாக்குகள் போடப்பட்டிருக்கின்றன...... இது ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை....... :(
@ shan shafrin
இருக்கலாம்.
அந்த நிலை கவலைக்குரியது என்பது இதற்கு முன்னைய பதிலில் குறிப்பிட்டுள்ளோம்.
வாக்காளர்களை பொறுப்புடன் செயற்படுமாறு கேட்டுக் கொண்டோம்.
தெரிவுகள் சரியாக இடம்பெற வேண்டும், உண்மையான விருப்புக்களைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
வாக்களித்து விட்டேன் :-)
@ எம்.ரிஷான் ஷெரீப்
உங்கள் தெரிவு வெற்றி பெற வாழ்த்துக்கள்....
நாங்களும் போட்டுட்டோம்ல..!
நல்லதொரு முயற்சி. பூனைக்கு மணி கட்டியமைக்கு வாழ்த்துக்கள். அத்தோடு அடியேனின் சில தாழ்மையான கருத்துக்கள்.
* காலத்தை (2008/2009/2010) வரையறுத்திருந்தால் தெரிவில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கலாம்.
* நான் கடவுளை எதிலுமே காணோமே....?
(இயக்கம், இசை, கதாநாயகன், .....)
மீண்டும் எனது வாழ்த்துக்கள்!
@ மனோரஞ்சன்,
உங்கள் பின்னூட்டம் சிறிது மாற்றியமைக்கப்பட்டுள்ளது,
தனிநபர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நலம்.
தவிர,
காலப்பகுதி கீழே குறிப்பிடப்பட்டிருக்கிறது.
2009 ஜுன் இற்குப் பிறகு வந்த திரைப்படங்களிலிருந்தே தெரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நான் கடவுள் திரைப்படத் 2009ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6ம் திகதியே வெளியாகியது, ஆகவே சேர்த்துக் கொள்ளப்படவில்லை.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
உங்கள் தெரிவு வெற்றிபெற வாழ்த்துக்கள்.
i put my for my choice
சிறந்த நடிகர் பகுதியில் 617 வாக்குகள்..... ஆதிக்க நடிகர் பகுதியில் 1152 வாக்குகள்.... :(
ஆஹ்...காலப்பகுதியை பார்க்கத்தவறிவிட்டேன். மன்னிக்கவும். (அதைக்கொஞ்சம் 'BOLD' செய்தாலோ அல்லது மேலே தூக்கினாலோ பார்க்க இலகுவாக இருக்கும் என நினைக்கின்றேன்)
நானும் வோட்டு போட்டுட்டேன்...
நானும் வோட்டு போட்டுட்டேன்...
புளொக்ல லிங்கும் போட்டுட்டேன்... :)
@ shan shafrin
விரைவில் இதற்குரிய தீர்வு காணப்படும்.
உங்களின் தொடர்ந்த கருத்துக்களுக்கு நன்றி...
@ shiny
உங்கள் தெரிவுகள் வெற்றி பெற எங்கள் வாழ்த்துக்கள்...
@ வளாகம்
உங்கள் உதவிக்கு நன்றிகள்...
தொடர்ந்தும் இணைந்திருங்கள்...
உங்கள் தெரிவு வெற்றிபெற வாழ்த்துக்கள்...
Done.. Voted..:-)
Done...........
when was the result will b anounced.....
when was the result will b anounced.....
how.the function will celebrate in grand manner ah?.......and when.?????
@ பேநா மூடி
மற்றும்,
@ Prabhu
இருவரின் தெரிவுகளும் வெற்றிபெற எங்கள் வாழ்த்துக்கள்....
@Prabhu
3 வாரங்கள் வாக்களிப்புக்கு விடப்படும்.
அதாவது 21 நாட்கள் முடிந்தவுடன் வாக்களிப்பு நிறுத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.
தொடர்ந்தும் இணைந்திருங்கள்...
where and wen will b the function will be held (award giving function)....pls tel me im waiting.....
என் கடமையை முடிச்சுட்டேன்...!!!
சிறந்த ACTOR & ACTRESS வெற்றிபெற வாழ்த்துக்கள்.
the award wil be given in grand function ah.....the function wil b held r not and wen..........
I had voted... wen results wil b announced?? where dis award function going to take place??
ஓட்டு போட்டாச்சு
ஒட்டு போட்டுட்டேன்!
கமல்ஹாசன், அஞ்சலி, சந்தானம்,ரஹ்மான், முத்துக்குமார், ரஞ்சித், ஸ்ரேயா க்ஹோசல்,அஜித், வசந்தபாலன், அங்காடித்தெரு
வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளும், உங்கள் தெரிவுகள் வெற்றிபெற வாழ்த்துக்களும்....
எப்போது முடிவுகள் வெளிவரும் என்ற கேள்விக்கு,
எதிர்வரும் வெள்ளிக்கிழமை, அதாவது 18ம் திகதி இரவுடன் வாக்களிப்புகள் நிறுத்தப்படும்.
முடிவுகள் எவ்வாறு அறிவிக்கப்படும் என்பதை அறியத் தருகிறோம்...
தொடர்ந்து இணைந்திருங்கள்...
அனைவரின் ஆதரவுக்கும் நன்றி.
அருமையான தேர்வுகள் . . .
done. waiting for final results
I have put my vote...
Sirantha puthumauga nadikar & nadigai.. sirantha thunai nadigar & nadigai ithayam sethu irrukkalam.... mattrapadi intha athikka nayagar virudhu thevaiyattarthu.. adutha varuda virudhugalil adhikka nayagar viruthai vaikathirgal .. mel sonna irrrandu viruthugal serungal..
Nadriyudan
Pon.Siva
நாங்களும் வாக்குப் போட்டுவிட்டோம். :)
Good work Keep it up
Post a Comment